நவம்பர் 8 கருப்புப்பண எதிர்ப்பு தினம் : அருண் ஜெட்லி அறிவிப்பு!

Must read

டில்லி

ரும் நவமபர் மாதம் எட்டாம் தேதியை கருப்புப்பண எதிர்ப்பு தினமாக அரசு கொண்டாடும் என அருண் ஜெட்லி அறிவித்துள்ளார்.

கடந்த வருடம் நவம்பர் மாதம் 8ஆம் தேதி அன்று பணமதிப்புக் குறைப்பு நடவடிக்கையை அறிவித்தது தெரிந்ததே.   அந்த பணமதிப்புக் குறைப்பு நடவடிக்கை தோல்வி அடைந்துள்ளதாக காங்கிரஸ் உட்பட பல எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.   இதனால் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் இந்த வருடம் நவம்பர் 8 ஆம் தேதியை கருப்பு தினமாக அனுசரிக்கப்படும் என கூறி இருந்தது.

இதற்கு பா ஜ க வட்டாரங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.  மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, “காங்கிரஸ் தனது ஆட்சியின் போது கருப்புப் பணத்தை ஒழித்திருக்க நிறைய வாய்ப்பு கிடைத்தது.   ஆனால் அவர்கள் அந்த நடவடிக்கை எடுக்கவில்லை.   பணமதிப்பு நடவடிக்கையால் கருப்புப்பணம் முழுவதும் அழிக்கப்பட்டுள்ளது.  அதனால் நவம்பர் 8ஆம் தேதியை அரசு கருப்புப்பண எதிர்ப்பு தினமாக கொண்டாடப் பட உள்ளது” என தெரிவித்துள்ளார்.

மேலும் ஜி எஸ் டி யை கப்பர் சிங் டாக்ஸ் என ராகுல் குறிப்பிட்டதற்கும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.    அவரது இந்த கருப்புப் பண எதிர்ப்பு நாள் அறிவிப்புக்கு பா ஜ க வை சேர்ந்த பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.   பா ஜ க தலைவர் அமித் ஷா தனது டிவிட்டரில்  பதிவுகளை வெளியிட்டுள்ளார்.

More articles

Latest article