டில்லி

க்கள் வங்கியில் முதலீடு செய்துள்ள பணத்தை அரசு காப்பாற்றும் என நிதி அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

மத்திய அரசு பொருளாதார சீர்திருத்தம் மற்றும் முதலீடு காப்பீடு சட்டம் இயற்ற உள்ளதாக செய்திகள் வெளியாகின.  இந்த சட்ட முன்வரைவு வரும் குளிர்காலக் கூட்டத் தொடரில் பாராளுமன்றத்தில் அளிக்கப்பட்டு விரைவில் சட்டமாக்கப்படும் என்றும் அந்த சட்டத்தின் மூலம் மக்கள் வங்கிகளில் முதலீடு செய்யப்பட்ட பணத்தை இழக்க பெரிதும் வாய்ப்புண்டு என அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தது.   இந்த சட்டம் பாராளுமன்றத்தில் அளிக்கப்பட அனுமதிக்க மாட்டோம் எனவும், அப்படியே அனுமதித்தாலும் அந்த சட்டத்தை கொண்டு வர எதிர்ப்பை தெரிவிப்போம் எனவும் எதிர்க் கட்சிகள் கூறி உள்ளன.

இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இதற்கு பதிலளிக்கும் வகையில் ஒரு ட்வீட் பதிந்துள்ளார். அதில் அவர், “பொருளாதார சீர்திருத்தம் மற்றும் முதலீடு காப்பீடு சட்டம் 2017 இன்னும் பார்லிமெண்ட் கமிட்டியின் ஆய்வில் உள்ளது.   அரசின் நோக்கம் பொருளாதார நிறுவனங்களையும் அதில் முதலீடு செய்தோரையும் காப்பது தான்.  இந்த நோக்கத்தில் என்றும் அரசு கடைபிடிக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.