
டில்லி
மாநிலங்கள் அவை உறுப்பினராக இன்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இன்று பதவி ஏற்கிறார்.
மாநிலங்களவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களும் ஏற்கனவே நிதிநிலை அறிக்கைக் கூட்டத் தொடர் சமயத்தில் பதவி ஏற்றுக் கொண்டனர். மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டதால் அவர் பதவி ஏற்கவில்லை. இவர் உத்திரப் பிரதேச மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தில்லி மருத்துவ மனையில் சிறுநீரக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இவர் தற்போது வீட்டில் இருந்த படி பணியை செய்து வருகிறார். இன்று காலை 11 மணிக்கு டில்லி நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள மக்களவை சபாநாயகர் அறையில் பதவி ஏற்பு நடைபெற உள்ளது. இன்று அவருக்கு மாநிலங்கள் அவை தலைவர் வெங்கையா நாயுடு பதவிப் பிரமாணம் செய்விக்கிறார்.
[youtube-feed feed=1]