டில்லி

நிதிநிலை அறிக்கை குறித்த பொதுமக்களின் கேள்விகளுக்கு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இன்று மாலை 7 மணிக்கு பதிலளிக்கிறார்.

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி 2018-19ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.    இது குறித்து பலதரப்பட்ட விவாதங்கள் நடந்து வருகின்றன.   எதிர்க்கட்சிகள் இந்த நிதிநிலை அறிக்கையை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.  ஆளும் கட்சியினர் புகழாரம் சூட்டி வருகின்றனர்.

இன்று மாலை 7 மணிக்கு நிதி அமைச்சர் அருண்ஜெட்லி பொதுமக்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார்.  தனது டிவிட்டர் பக்கத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு அருண் ஜெட்லி பதில் அளிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.   பொதுமக்கள் தங்கள் கேள்விகளையும், சந்தேகங்களையும் #AskYourFM என்னும் ஹேஷ் டாக்கில் பதிவிட்டு கேட்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.