சென்னை
ஜெயலலிதா மரணம் அடைந்தது தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தை 6 மாத காலம் நீட்டித்து அரசாணை ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்களுக்குப் பின் டிசம்பர் 5 ஆம் தேதியன்று மரணம் அடைந்தார். ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக ஓ பி எஸ் உட்பட பலரும் கூறினர். ஒபிஎஸ் மற்றும் எடப்பாடி அணி இணைந்ததும் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஆறுமுகசாமி தலைமையில் தமிழக அரசால் ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது. அப்போது இரண்டு மாத காலத்தில் விசாரணையை முடிக்க அரசு உத்தரவிட்டு இருந்தது.
இந்த ஆணையத்தில் பலர் இதுவரை விசாரிக்கப்பட்டுள்ளனர். இது தவிர மேலும் பலருக்கு விசாரணைக்கு சம்மன் அனுப்பப் பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஆணயத்துக்கான காலக் கெடு கடந்த மாதம் 25ஆம் தேதியுட முடிவடைந்து விட்டது. விசாரணை இன்னும் முடிவடையாத காரணத்தினால் அரசு இந்த ஆணையத்துக்கு மேலும் ஆறு மாத காலம் அவகாசம் அளித்தது. அதற்கான அரசாணையை இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ளது.