சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம் மேலும் 4 மாதம் அவகாசம் கோரி தமிழக அரசுக்கு கடிதம் எழுதி இருக்கிறது.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தை அமைக்கப்பட்டுள்ளது.  2017ம் ஆண்டு செப்டம்பர் 25ம் தேதி அதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்தது.

ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அவரது உறவினர்கள், போயஸ்கார்டன் பணியாளர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், அப்பல்லோ மருத்துவர்கள், பணியாளர்கள் என 150க்கும் மேற்பட்டோரிடம் ஆணையம் விசாரணை நடத்தியது.

இந்நிலையில் மேலும் 4 மாதம் அவகாசம் கேட்டு தமிழக அரசுக்கு ஆறுமுகசாமி ஆணையம் கடிதம் எழுதி உள்ளது. வரும் 24ம் தேதியுடன் இந்த ஆணையத்தின் அவகாசம் முடியும் நிலையில் கூடுதல் அவகாசம் கேட்டுள்ளது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம் 8வது முறையாக அவகாசம் கேட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.