த்ரில்லர் உள்ளிட்ட கதையம்சம் உள்ள படங்களில் மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அருள்நிதி.
டி-பிளாக், டைரி உள்ளிட்ட படங்களில் கமிட்டாகி இருக்கிறார் அருள்நிதி.
அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் ஒயிட் கார்பட் பிலிம்ஸ் மற்றும் பி.ஜி.மீடியா வொர்க்ஸ் இணைந்து தயாரிக்கும் தேஜாவு திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார்.
க்ரைம் த்ரில்லர் படமான இதில் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார் அருள்நிதி.
#Dejavu teaser ..once again thank you all for your support ..hope u all like it 🙂🙏❤ https://t.co/uS3fQiGFUG
— Arulnithi tamilarasu (@arulnithitamil) January 27, 2022
பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசையமைத்துள்ள தேஜாவு படத்தின் டீசர் இன்று வெளியாகி இருக்கிறது.
அருள்நிதியுடன் மதுபாலா, ஸ்மிருதி வெங்கட் தவிர அச்சுத் விஜய், காளி வெங்கட், சேத்தன், மற்றும் மைம் கோபி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.