சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நடராஜர் சன்னதிக்கு எதிர்ப்புறம் உள்ள பிரம்மாண்டமான உற்சவர் கொடி மரத்தில் உற்சவர் கொடியை உற்சவ ஆச்சாரியார் மீனாட்சி நாத தீட்சதர் ஏற்றி வைத்தார்.

சிதம்பரம் நடராஜர் கோயில் தில்லை நடராஜர் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கோவில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் தென் மாநிலமான தமிழ்நாட்டில் உள்ளது. இக்கோயிலுக்கு ஆழ்ந்த தொன்மத் தொடர்பு உண்டு. ஊரின் பெயர் தில்லை என்று இருந்தபோது, ​​கோயிலில் ஒரு சிவன் சன்னதி இருந்தது. சிதம்பரம் என்பது இப்போது கோயில் அமைந்துள்ள நகரத்தின் பெயர், அதாவது “சிந்தனையில் ஆடை” அல்லது “ஞானத்தின் வளிமண்டலம்” என்று பொருள்படும்.

இந்த கோவிலின்  திருவிழாக்களின் முக்கியனது ஆருத்ரா திருவிழா. இந்த ஆண்டு ஆரூத்ரா திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், வரும் 26ம் தேதி நடக்கிறது. அன்றைய தினம் நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் தனித்தனி தேர்களில் எழுந்தருளி நான்கு வீதிகள் வழியாக வலம் வருவர். மறுநாள் 27ம் தேதி ஆருத்ரா தரிசன விழா நடக்கிறது. அன்று அதிகாலை நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாளுக்கு ஆயிரங்கால் மண்டப முகப்பில், மகா அபிஷேகம் நடக்கிறது.

முன்னதாக  இன்று அதிகாலை நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாளுக்கு ஆயிரங்கால் மண்டப முகப்பில், மகா அபிஷேகம் நடைபெற்றது.தொடர்ந்து, பிற்பகல் 2:00 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது.

விழா நடைபெறும் 10 நாட்களிலும் காலை, மாலை பஞ்சமூர்த்தி வீதியுலா, விசேஷ நாதஸ்வர கச்சேரி மற்றும் தேவார திருவாசக பன்னிரு திருமுறை நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் செயலாளர் சிவராம தீட்சிதர் தலைமையில் பொது தீட்சிதர்கள் செய்துள்ளனர்.