ண்டன்

ருவருக்கு மாரடைப்பு ஏற்படுமா என்பதைக் கண்களை ஸ்கேன் செய்வதன் மூலம் கண்டறியும் செயற்கை நுண்ணறிவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதயம் சார்ந்த பிரச்சினைககா  அறிகுறிகள் கண்களிலுள்ள விழித்திரையின் சிறு சிறு ரத்த நாளங்களில் ஏற்படும் மாற்றங்கள் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.  இதைத் தொடர்ந்து, இங்கிலாந்தைச் சேர்ந்த லீட்ஸ் என்ற பல்கலைக்கழக ஆய்வாளர்கள் செயற்கை நுண்ணறிவு ஒன்றைத் தயார் செய்யும் முயற்சியில் இறங்கினர்.   இந்த செயற்கை நுண்ணறிவு, விழித்திரையை ஸ்கேன் செய்யும்போதே அது இதயத்தின் செயல்பாடுகளைக் கணிக்க வேண்டுமென திட்டமிட்டிருக்கின்றனர்.

இதில் குறிப்பாக இதயப்பிரச்னைகள் இருப்பவர்களை அடையாளம் காண வேண்டுமென திட்டமிடப்பட்டிருக்கிறது.   இந்த கண்டுபிடிப்பு பணிக்காக ஆய்வாளர்கள், 5,000 பேர் விழித்திறை மற்றும் இதயத்தில் எடுக்கப்பட்ட இரு ஸ்கேன்களை ஒப்பீடு செய்திருக்கின்றனர்.  இதன் முடிவில் இந்த செயற்கை நுண்ணறிவு கண்டறியப்பட்டிருக்கிறது.

முதலில் இதய நோயாளிகளின் ரெடினா மற்றும் இதயத்திற்கான தொடர்பு கண்காணிக்கப்பட்டது. அவற்றின் முடிவாகச் செயற்கை நுண்ணறிவு கண்டறியப்பட்டது.   இதுவரை எக்கோ-கார்டியோகிராபி அல்லது எம்.ஆர்.ஐ. ஆகியவை மட்டுமே இதயத்தின் பிரச்சினைகளை முன்கூட்டியே கணித்துச் சொல்பவையாக இருக்கின்றன.  அவ்வாறு இருக்க, மருத்துவத் துறையில் இந்த புதிய செயற்கை நுண்ணறிவு புதிய பாதையை வகுக்குமென ஆய்வாளர்கள் கணிக்கின்றனர்.

இதயப்பிரச்னைக்கான வாய்ப்புகளை இந்த விழித்திரை ஸ்கேன், 70-80% துல்லியமாகக் கணிப்பதாகக் கூறும் என்னும் விஞ்ஞானிகள், இந்த முறையை முழு இதய ஆய்வுக்கு பயன்படுத்தலாம் என்கின்றனர். இது குறித்து ஆய்வாளர்களில் ஒருவரான பேராசிரியர் அலெக்ஸ் ஃப்ராங்கி, “இந்த தொழில்நுட்பம், இதயப் பிரச்சினைகளை எளிதாகக் கண்டறிவதற்கான வழிமுறைகளை விரைந்து கண்டறியும். தவிர விழித்திரை ஸ்கேன் என்பது மிகவும் குறைவான விலையில் செய்யக்கூடிய அளவுக்கு எளிமையான ஒரு முறை ஆகும்.

எனவே அனைத்து கண் பரிசோதகர்களும் இதை தங்களது பரிசோதனை இயந்திரத்தில் ஏற்றிக்கொள்ளலாம்.  இதனால் இது மக்கள் மத்தியில் இதன் பயன்பாடு மிக எளிதில் போய் சேரும். வெறும் கண் பரிசோதனைக்குச் செல்லும் ஒருவருக்கு, அவருடைய இதயமும் கண்காணிக்கப்பட்டுச் சொல்லப்படும் எனும்போது நீண்ட நாள்களாக இதய பாதிப்பை அறியாமலேயே இருப்போர் பலரும் தங்கள் பிரச்சினையைத் துரிதமாக அறிந்து, பல பிரச்சினைகளிலிருந்து தங்களை தற்காத்துக்கொள்ள முடியும்” என்று தெரிவித்துள்ளார்.