கமதாபாத்

பா ஜ க வை எதிர்த்து போட்டியிடும் தலித் தலைவருக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் அனுப்பி இருக்கிறது.

குஜராத் தேர்தலில் வடகாம் தொகுதியில் தலித் தலைவர் ஜிக்னேஷ் மேவானி போட்டியிட உள்ளார். அவருக்கு ஆதரவாக காங்கிரஸ் அந்தத் தொகுதியில் வேட்பாளரை நிறுத்தாமல் தன் ஆதரவை தெரிவித்துள்ளது.  ஆம் ஆத்மி கட்சியும் ஆதரவை அளித்துள்ளது.  அக்கட்சியினர் ஜிக்னேஷுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யவும் ஒப்புக் கொண்டுள்ளனர்.  இதனால் அந்தத் தொகுதியில் பா ஜ க வேட்பாளர் விஜய் சக்ரவர்த்திக்கும் ஜிக்னேஷ் மேவானிக்கும் இடையே நேரடி போட்டி உண்டாகி இருக்கிறது.

ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயிலை தடுத்து ஒரு மறியல் போராட்டம் கடந்த ஜனவரி மாதம் நடந்தது.  அதில் ஜிக்னேஷ் மேவானி கலந்துக் கொண்டுள்ளார்.  அவர் இந்த வழக்கில் நேரில் ஆஜராகவில்லை.  அவருடைய வழக்கறிஞர் ”ஜிக்னேஷ் தேர்தல் வேட்புமனு அளிக்கும் பணியில் இருந்ததால் நேரில் வர இயலவில்லை” என தெரிவித்தார்.  ஆனால் அதை ஏற்காத நீதிபதி ஜிக்னேஷ் மோவானிக்கு பிடி வாரண்ட் பிறப்பித்துள்ளார்.