கைதா… துப்பறிவாளனை காப்பாத்துங்க!: விஷாலை வெறுப்பேற்றும்  தமிழ் ராக்கர்ஸ், தமிழ் கன் இணையதளங்கள்

Must read

திரையரங்கில் வெளியாவதற்கு முன்பே, தமிழ்த்  திரைப்படங்களை இணையத்தில் வெளியிடும் இணையதளங்கள் tamil rakers  மற்றும்  tamil gun  இணையதளங்கள். இந்த இணையதளங்கள் குறித்து திரையுலகினர் பல முறை காவல்துறையில் புகார் கொடுத்தும் புதுப்படங்கள் இணையத்தில் வெளியாவதை தடுக்க முடியவில்லை.

இந்த நிலையில tamilgun.com என்ற இணையதள உரிமையாளர் (அட்மின்) கவுரி சங்கரை காவல் துறை கைது செய்துவிட்டதாகவும், இந்த நடவடிக்கையில் விசால் தலைமையிலான குழு ஆறு மாதங்களாக பணியாற்றி வந்தது என்றும் அறிவிக்கப்பட்டது. பிறகு, கவுரி சங்கர்  tamil rakers   இணைய தளத்தின் அட்மின் என்று தகவல் வெளியானது.

ஆனால் கவுரி சங்கருக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று மேற்கண்ட இரு இணையதளங்கள் அறிவித்துள்ளன.  மேலும்  tamil gun  இணையதளம், “அப்பாவிகளைக் கைது செய்யாதீர்கள். விரைவில் வெளியாக இருக்கும் விசாலின் துப்பறிவாளன் திரைப்படத்தை இணையதளத்தில் வெளியாகாமல் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று கிண்டலாக தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இது திரைத்துறையினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

More articles

Latest article