மும்பை:

காராஷ்டிரா மாநிலத்தில் செய்தியாளர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா சோதனையில் 30 பேருக்கு கொரோனா தொற்று அறிகுறி உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத், தமிழகம், தெலுங்கானா மாநிலங்களில் நாளுக்கு நாள் அதன் தாக்கம் வீரியமாகி வருகிறது.

இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் ஊடகத்துறை, பத்திரிகைத்துயைச் சேர்ந்த செய்தி யாளர்கள், ஒளிப்பதிவாளர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது. அதையடுத்து,  மாநில அரசு  சார்பில்  செய்தியாளர்களுக்கு கொரோனா சோதனை முகாம் நடத்தப்பட்டது.

இந்த சோதனையில் சுமார் 170 செய்தியாளர்கள் கலந்துகொண்டனர்.  அவர்களில் 30 பேருக்கு கொரோனா அறிகுறி உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்களில் ஒரே டிவி சேனலைச் சேர்ந்த செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர், போட்டோகிராபர்  உள்பட அந்த குரூப்பில் உள்ள அனைவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாகவும், மேலும் பலரது சோதனை முடிவு வரவேண்டியது இருப்பதாகவும்  மும்பை பெருநகர மாநகராட்சி தெரிவித்து உள்ளது.

இது மற்ற செய்தியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்திலும் 2 செய்தியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.