சென்னை:

சென்னை பல்லாவரத்தில் உள்ள ராணுவ குடியிருப்பில், நேற்று இரவு தூங்கிக்கொண்டிருந்த ஹவில்தார்  சுட்டுக்கொன்ற வீரர் ஒருவர், தானும் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை பல்லாவரத்தில் உள்ள ராணுவ குடியிருப்பில், வசித்து வருபவர் பிரவீண்குமார் ஜோஷி. ராணுவத்தில் ஹவில்தாராக உள்ளார். அவருக்கு கீழ் பணியாற்றி வருபவர்  ரைபிள் மேன்  ஜெக் ஷீர் தான்.  ஜெக் ஷீர் தான்  ஒழுங்காக பணிக்கு வரவில்லை எனக்கூறப்படுகிறது. இதனை, பிரவீன்குமார் கண்டித்ததால், . இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரத்தில் இருந்து வந்த ரைபிள் மேன் இன்று அதிகாலை 3 மணி அளவில்  ஹவில் தாரின்  அறைக்கு சென்று,  அங்கு  தூங்கிக் கொண்டு இருந்த ஹவில்தாரை  துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து உள்ளார். பின்னர் அதே துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து பல்லாவரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

.