நெட்டிசன்:
அரியலூரில் நடைபெற்ற மதிமுக கூட்டத்தில் அக்கட்சிபொதுச்செயலாளர் வைகோ, “ராணுவக்கட்டுப்பாடு” குறித்து பேசியதையும், கரூர் கூட்டத்தில் எடுத்த அதிரடி நடவடிக்கை பற்றியும் அருணகிரி சங்கரன்கோயில், ““அரியலூர் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் வைகோ…“ என்ற தலைப்பில் எழுதிய முகநூல் பதிவு:
இன்று இந்தக் கூட்டத்தின் தொடக்கத்திலேயே நான் உரை ஆற்றுகிறேன்.
நான் பேசி முடித்த உடனே புறப்பட்டுப் போய் விடாதீர்கள்.
அதன்பிறகுதான் கூட்டமே தொடங்கும்.
அதற்குப் பிறகுதான் நீங்கள் எல்லோரும் பேசப் போகின்றீர்கள். அதை நான் கேட்கப் போகின்றேன்.
இந்தக் கூட்டத்திற்கான விளம்பரத் துண்டு அறிக்கையில் 150 பெயர்கள் இருக்கின்றன.
கடைசியாக அந்தப் பெயர்களை நான் வாசிப்பேன்.
அவர்கள் அனைவரும் இருக்கின்றார்களா? என்று சோதிப்பேன்.
இல்லை என்றால், அவர்கள் வகித்து வருகின்ற கட்சிப் பொறுப்புகளில் இருந்து உடனே நீக்கப்படுவார்கள்.
அடுத்த கூட்டங்களில் அவர்கள்து பெயர்களை நீங்கள் அச்சிடக் கூடாது.
இதே போலத்தான் நேற்று கரூரிலும்
செய்து விட்டு வந்து இருக்கின்றேன்.
ஒரு கட்சி என்றால், இராணுவக் கட்டுப்பாட்டோடு இயங்க வேண்டும்.” என்று வைகோ பேசினார்.