இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்ததுடன், ஆயுத பயிற்சி அளித்த விவகாரத்தில் பஜ்ரங்தள் அமைப்பின் அயோத்தியா தலைவர் கைது செய்யப்பட்டார். 
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியாவில் கடந்த மே 10ஆம் தேதி விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் இளைஞர் அமைப்பான பஜ்ரங் தள் சார்பில் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில், இளைஞர்களுக்கு துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இஸ்லாமியர்களின் உடை மற்றும் தலைக்கு அணியும் குல்லா அணிந்தோரை இந்த பயிற்சி முகாமில் பயங்கரவாதிகளாக சித்தரித்த வீடியோ காட்சிகள் வெளியானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.bajrang_dal_2__0
இந்த நிலையில், இளைஞர்களுக்கான பயிற்சி முகாமில் ஆயுத பயிற்சி வழங்கப்பட்டது தொடர்பாக அயோத்தியா போலீசார் வழக்குப்பதிவு செய்தார்கள்.  மேலும்  இருவேறு மதப்பிரிவினர் இடையே வன்முறையை தூண்ட முயற்சித்தது உள்ளிட்ட பிரிவுகளிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், பயிற்சி முகாமில் ஆயுத பயிற்சி ஏதும் அளிக்கப்படவில்லை என விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.  ஆனாலும் இதை ஏற்க மறுத்த அயோத்தியா போலீசார், வீடியோ காட்சிகளை அடிப்படையாக வைத்து, அயோத்தியா பஜ்ரங் தள் தலைவர் மகேஷ் மிஸ்ராவை கைது செய்தனர்.  மேலும் 50 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.