சென்னை: கட்சித் தொடங்கப்போவதாக அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், கட்சியின் ஒருங்கிணைப்பாளராக பாஜகவின் பாஜகவின் அறிவுசார் தலைவராக  இருந்த அர்ஜுன மூர்த்தி நியமிக்கப்படுவதாக அறிவித்தார். அதையடுத்து, அர்ஜூன மூரத்திதனது  டிவிட்டரிலும் பக்கத்தில் அதிரடியாக மாற்றம் செய்துள்ளார்.

இதுவரை தமிழ்க பாஜக தலைவர் எல்.முருகனுடன் இருப்பதாக பதிவிட்டிருந்தவர்,இன்று ரஜினி கட்சியில் பதவி பெற்றதும்,  Now with Thalaivar (தற்போது தலைவருடன்)  என்று மாற்றம் செய்துள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த ரஜினி,  தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்தாச்சு. நான் வெற்றியடைந்தாலும் அது மக்களின் வெற்றி, தமிழக மக்களுக்காக என் உயிரே போனாலும் சந்தோஷம்தான். கொடுத்த வாக்கில் இருந்து என்றுமே தவற மாட்டேன். வாக்கு கொடுத்து விட்டேன் நான் வெற்றியடைந்தாலும் அது மக்களின் வெற்ற என்று பஞ்ங் கொடுத்ததுடன்,  தொடங்க போகும் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன் மூர்த்தி நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என்று அறிவித்தார்.

அர்ஜுன் மூர்த்தி இன்று காலை வரை  பாஜகவிலேயே இருந்து வந்தார். அவர் கட்சியின்   அறிவுசார் பிரிவு தலைவர் பொறுப்பில் இருந்ததுடன்,  பாஜக வேல் யாத்திரை பாஜக தொடங்கிய வேல் யாத்திரையில் இவர் முக்கிய பங்கு வகித்தார். வேல் யாத்திரை தொடங்கியதில் அர்ஜுன் மூர்த்தி மாஸ்டார்மைண்டாக செயல்பட்டார் என்று கூறப்படுகிறது. இதனால் முருகனுடன் கைது செய்யப்பட்டார்.  மேலும், பாஜகவின் தமிழக பொறுப்பாளர் கர்நாடாகாவை சேர்ந்த சிடி ரவிக்கும் அர்ஜுன் மூர்த்தி நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது.

இந்த நிலியில், அர்ஜுன் மூர்த்திக்கு, ரஜினி முக்கியத்துவம் அளித்து, தான்  தொடங்க போகும் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அதிகாரம் கொடுத்திருப்பது அரசியல் நோக்கர்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.  ரஜினியின்  கட்சியின் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போவதிலும், தேர்தல் கூட்டணி  தொடர்பான ஆலோசனையிலும் முக்கிய பங்கு வகிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்தான்  அர்ஜுன மூர்த்தி, ” தற்போது தலைவருடன்” இருக்கிறேன் என்று டிவிட்டரில் மாற்றம் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையில்,   அர்ஜுன் மூர்த்தி இப்போது பாஜகவில் இருந்து விலகிவிட்டதாகவும், அவரை   கட்சியை விட்டு நீக்கிவிட்டதாகவும் தகவல்கள் பரவி வருகின்றனர்.  பாஜகவின் மாநில பொதுச்செயலாளர் கருநாகராஜன்,  அர்ஜுன் மூர்த்தி  பாஜகவில் இருந்து வெளியேற்றி விட்டதாக டிவிட் பதிவிட்டுள்ளார்.