சென்னை
முன்னாள் இந்திய இந்திய டேபிள் டென்னிஸ் வீரரும் அர்ஜுனா விருது பெற்றவருமான வி சந்திரசேகர் கொரோனா தாக்கத்தால் இன்று மரணம் அடைந்தார்.
பிரபல டேபிள் டென்னிஸ் வீரரான வி சந்திரசேகர் சந்திரா என செல்லமாக அழைக்கப்படுபவர் ஆவார். இவர் மூன்று முறை தேசிய சாம்பியன் பட்டத்தைப் பெற்றவர் ஆவார். இவர் 1982 ஆம் வருட காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இறுதிச் சுற்று வரை சென்றவர் ஆவார்.
கடந்த 1984 ஆம் வருடம் இவருக்கு முழங்காலில் நடந்த அறுவை சிகிச்சைக் காரணமாக இவர் தனது நடமாட்டம். பார்வை மற்றும் பேச்சுத் திறனை இழந்தார். இதனால் இவரது விளையாட்டு முடிவுக்கு வந்தது. அதன் பிறகு அவர் மருத்துவமனையுடன் சட்டப் பூர்வமாக போராடி வெற்றி பெற்றார். அதன் பிறகு மீண்டும் சிகிச்சை பெற்று பயிற்சியாளராகப் பணி புரிந்து வந்தார்.
தற்போது 64 வயதாகும் இவர் கொரோனா பாதிப்பு காரணமாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இவருக்கு மனைவியும் ஒரு மகனும் உள்ளனர். இவரது மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.