டில்லி:
மத்தியஅரசு 2019ம் ஆண்டு விளையாட்டு வீரர்களுக்கான விருதுகளை அறிவித்து உள்ளது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த பிரபல பாடிபில்டர் பாஸ்கரனுக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
விளையாட்டு வீரர்களை கவுரவிக்கம் வகையிலான ராஜீவ்காந்தி கேள் ரத்னா, அர்ஜுனா, துரோணாச்சாரியா, தயான்சந்த் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில் இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா அர்ஜுனா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
விமல்குமா ர்(பேட்மிண்டன்), சந்தீப் குப்தா (டேபிள் டென்னிஸ்), மொகந்தர் சிங்(தடகளம்) ஆகியோருக்கு துரோணாச்சாரியா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா, பாரா ஒலிம்பிக் வீராங்கனை தீபா மாலிக் ஆகியோருக்கு ராஜிவ்காந்தி கேல் ரத்னா விருது
உடற்கட்டு போட்டி தமிழகத்தை சேர்ந்த பாஸ்கரனுக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
வாழ்நாள் சாதனையாளர் விருது ஹாக்கி மெஸ்பான் படேல், கபடி ரம்பீர் சிங், கிரிக்கெட் சஞ்சய் பரத்வாஜ் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ள வீரர்கள்
1. தஜிந்தேர் சிங்- தடகளம்
2. முகமது அனாஸ் – தடகளம்
3. பாஸ்கரன் – பாடிபில்டிங்
4. சோனியா லாதர்- குத்துச்சண்டை
5. ரவீந்திர ஜடேஜா- கிரிக்கெட்
6. சிங்லென்சனா சிங் – ஹாக்கி
7. அஜய் தாக்கூர்- கபடி
8. கவுரவ் சிங் – மோட்டார் விளையாட்டு
9. ப்ரமோத் பகத்- பேட்மின்டன் (பாரா விளையாட்டு)
10. அஞ்சும் மோட்கில் – துப்பாக்கிச்சுடுதல்
11. ஹர்மீத் ரஜுல் தேசாய் – டேபிள் டென்னிஸ்
12. பூஜா தண்டா – மல்யுத்தம்
13. ஃபவுத் மிர்சா – குதிரைச்சவாரி
14. குர்பீத் சிங் – கால்பந்து
15. பூனம் யாதவ் – கிரிக்கெட்
16. ஸ்வப்னா பர்மன் – தடகளம்
17. சுந்தர் சிங் – தடகளம் (பாரா விளையாட்டு)
18. பாமிதிபடி சாய் ப்ரனித் – பேட்மின்டன்
19. சிம்ரன் சிங் – போலோ