டில்லி,
பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தங்கமகன் மாரியப்பன் தங்கவேலுவிற்கு அர்ஜுனா விருதை மத்திய அரசு அறிவித்து உள்ளது.
கடந்த ஆண்டு பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில், இந்தியா சார்பில் கலந்து கொண்ட தமிழக வீரர் மாரியப்பன் உயரம் தாண்டுதல் போட்டியில் 1.89 மீட்டர் உயரம் தாண்டி சாதனை படைத்து முதல்பரிசான தங்க பதக்கத்தை வென்றார்.
இதைத்தொடர்ந்து அவரது சாதனையை அங்கீகரிக்கும் வகையில் பத்ம விருது வழங்க விளையாட்டு அமைச்சகத்தின் சார்பில், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரைக்கப்படும்’ என்று கடந்த வரும் செப்டம்பர் 24ந்தேதி மத்திய விளையாட்டுத்துறை மந்திரி விஜய் கோயல் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவிற்கு அர்ஜுனா வழங்குவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது.
இவருடன் சேர்த்து மொத்தம் 17 பேருக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டுள்ளது.
சேவாக், பி.டி.உஷா உள்ளிட்டோர் அடங்கிய தேர்வுக்குழு இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டது.
மாரியப்பனுக்கு ஏற்கனவே பத்மஸ்ரீ விருது ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது