இலங்கை விடுவித்த மீனவர்கள் இன்று தமிழகம் வருகை!

சென்னை,

லங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட  77 மீனவர்களும்  இந்திய தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் இன்று மாலை தமிழகம் திரும்புகிறார்கள்.

எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 90க்கும் மேற்பட்டோர் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 77 பேரை நல்லெண்ண அடிப்படையில் விடுவிப்பதாக கடந்த 28 -ம் தேதி இலங்கை அரசு அறிவித்தது.

இந்நிலையில் இலங்கையிலிருந்து விடுவிக்கப்பட்ட தமிழகத்தின்  ராமேஸ்வரம், புதுக்கோட்டை மற்றும் நாகை மீனவர்கள் 77 பேர் இன்று தாயகம் திரும்புகின்றனர்.

விடுவிக்கப்பட்ட மீனவர்கள் இலங்கை கடற்படையால், சர்வதேச எல்லையில் இந்திய கடலோர காவல்படையிடம் ஒப்படைத்தனர். அவர்கள் இன்று மாலைக்குள் காரைக்கால் துறைமுகம் வந்தடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மீனவர்கள் பிரச்சினை குறித்து பாராளுமன்றத்தில் பேசிய, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா,  பிரதமர் மோடி கேட்டு கொண்டதன் பேரில், இதுவரை  251 தமிழக மீனவர்கள் மற்றும் படகுகளை இலங்கை விடுதலை செய்துள்ளது என்று கூறினார்.

 
English Summary
SriLanka released taml fishermen are arrived today tamilnadu