
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் மகேஷ்பாபு தற்போது பரசுராம் பெட்லா இயக்கும் ‘சர்காரு வாரி பாட்டா’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.
மகேஷ் பாபுவுக்கு வில்லனாக நடிக்க பல்வேறு முன்னணி நடிகர்களிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்திவந்தது. இதில் நடிகர் அர்ஜுன் வில்லனாக நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் முடிவுக்கு வந்த பின் அவர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என்றும் கூறப்படுகிறது.
Patrikai.com official YouTube Channel