டில்லி

ன்மோகன் சிங் பற்றிய படமான தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர் படத்தில் ராகுல் காந்தியாக நடித்த அர்ஜுன் மாதுர் அதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டின் புகழ் பெற்ற நடிகர்களில் ஒருவரான அர்ஜுன் மாதுர் பல திரைப் படங்களிலும் இணைய தொடர்களிலும் நடித்து வருகிறார். இவர் அமேசான் பிரைம் இணைய தொடரான மேட் இன் ஹெவன் மூலம் தற்போது பலராலும் அறியப்பட்டுள்ளார். இவர் இந்த தொடரில் ஓரின சேர்க்கையாளராக நடிப்பது சர்ச்சையை உண்டாக்கியது.

இவர் ஏற்கனவே சர்ச்சைக்குரிய தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர் என்னும் படத்தில் ராகுல் காந்தியாக நடித்துள்ளார்.

தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர் (விபத்தால் பிரதமர் ஆனவர்) என்னும் திரைப்படம் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வாழ்க்கைக் கதையை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டது. இதில் அர்ஜுன் மாதுர் நடித்த ராகுல் காந்தி பாத்திரம் சர்ச்சைக்குறிய முறையில் உள்ளதாக கூறப்பட்டது. இந்த படம் சரியாக ஓடாததால் இது குறித்து யாரும் கருத்து தெரிவிக்கவில்லை.

இது குறித்து அர்ஜுன் மாதுர், “தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர் திரைப்படம் எனக்கு சிறிதும் பிடிக்கவில்லை. ஒருவரை தேசப் பற்று அற்றவர் என சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. அதிலும் நான் நடித்த ராகுல் காந்தி கதாபாத்திரம் மிகவும் தவறாக சித்தரிக்கப்பட்டிருந்தது. அதனால் நான் இந்த கதாபாத்திரத்தில் நடித்ததற்காக வருந்துகிறேன். தேசப் பற்றுக்கும் தேச விரோதத்துக்கும் இடையில் ஒரு மெல்லிய கோடு மட்டுமே உள்ளது” என தெரிவித்துள்ளார்.