மும்பையில் பாந்த்ரா பகுதியில் தான் தங்கியிருந்த வீட்டில் நேற்று அதிகாலை சுஷாந்த் சிங் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கடந்த இரண்டு மாதங்களாக இவர் கடும் மன உளைச்சலில் இருந்ததாகவும் அதன் காரணமாகவே இவர் தற்கொலை செய்திருப்பார் எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் அர்ஜூன் கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கதத்தில் சுஷாந்துடன் கடைசியாக பேசிய ஸ்கிரீன் ஷாட்டை பகிர்ந்து, நீண்ட பதிவை எழுதியுள்ளார்.

https://www.instagram.com/p/CBcV5MhJ8-z/

”18 மாதங்களுக்கு முன்னால் ‘கேதார்நாத்’ பட ரிலீஸின் போது சுஷாந்த் தனது அம்மாவை பற்றி பதிவு ஒன்றை எழுதியிருந்தார். அவரது படம் ரசிகர்களால் கொண்டாடப்படும் போது அதனை காண அவரது அம்மா இல்லை என்று அவர் வருத்தப்பட்டிருக்கலாம். என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.