விஜய் மற்றும் நயன்தாரா நடிக்கும் ‘பிகில்’ படவேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளன. அட்லி இயக்கும் இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது.

அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய் நடிக்கிறார். இது விஜய்க்கு 64-வது படமாகும். இந்த படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கியுள்ளன. இதில் கதாநாயகியாக நடிக்க ராஷி கண்ணா, ராஷ்மிகா மந்தனா ஆகியோருடன் இயக்குனர் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் விஜய்யுடன் அர்ஜுனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபகாலமாக அர்ஜுன் கதாநாயகனாக நடிப்பதை விட குணச்சித்திரப்பாத்திரங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

[youtube-feed feed=1]