சென்னை:
10ம் வகுப்பு தேர்வு மையங்களில் போதிய வசதிகள் உள்ளதா என்பதை கண்காணிக்க கல்வித்துறை அதிகாரிகளுக்கு தேர்வுத்துறை அறிவுறுத்தி உள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் தள்ளி வைக்கப்பட்ட 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 15-ஆம் தேதி முதல் ஜூன் 25ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மாணவர்கள் படித்த பள்ளிகளியே தேர்வு நடைபெற உள்ள நிலையில், கொரோனா பரவல் காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இந்த தேர்வு மையங்களில் மாணவர்களுக்கு தேவையான வசதிகள் முழுமையாக உள்ளதா? என தேர்வு மைய ஆசிரியர்கள் கண்காணித்து அறிக்கை அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதில், தேர்வு மையங்கள் அனைத்தும் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டதா? தூய்மையாக உள்ளதா? சானிடைசர் , தண்ணீர் போனற் தேவையான வசதிகள் உள்ளதாக என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மேலும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக அமைக்கப்பட்ட 3825 மையங்கள் முதன்மை மையங்களாகவும், தேர்வு மையங்களாக அமைக்கப்பட்ட பள்ளிகள் துணை மையங்களாகவும் கருதப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.