மும்பை,

ந்தே மாதரம் பாடலைப் பாட மறுப்பவர்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கத் தயாரா என்று சிவசேனா கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

பாரதியஜனதா கூட்டணி கட்சியான சிவசேனா மத்திய அரசுக்கு எதிராக அவ்வப்போது கருத்து தெரிவித்து வருகிறது.

நாடு முழுவதும் 71வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளிதழன சாம்னாவில், மத்திய அரசு குறித்து கடுமையாக விமர்சித்து எழுதப்பட்டுள்ளது.

அதில், காஷ்மீர் தொடர்பான பிரச்சனைகளுக்கு நிரத்தரத் தீர்வுக் காண, அம்மாநிலத்திற்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370-ஐ நீக்க வேண்டும் என்றும், இதற்கு காஷ்மீல் மக்கள் ஆதரவு தெரிவிப்பார்கள் என்று கூறியுள்ளது.

நாடு முழுவதும்பசு பாதுகாவலர்கள் என்ற போர்வையில் வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று  வலியுறுத்தி உள்ளது.

மேலும், மக்களை பெரும் துயரத்துக்கு உள்ளாக்கி,  செல்லாத ரூபாய் நோட்டுத் திட்டம், ஜி.எஸ்.டி. வரி உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால்,  வந்தே மாதரம் பாடலைப் பாட மறுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டு கிறது. அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க தயாரா? என்றும் கேள்வி எழுப்பி உள்ளது.

வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்புப் பணம் மீட்கப்பட்டு, ஒவ்வொரு மக்களின் வங்கிக் கணக்கிலும் செலுத்தப்படும் என்று பாஜக தேர்தல் நேரத்தில் கூறியதை நினைவு படுத்துவதாகவும், அந்த வாக்குறுதி எப்போது நிறைவேற்றப்படும் என்றும் கேள்வி எழுப்பி உள்ளது.

சிவசேனாவின் இந்த அதிரடி கேள்விகள் பாரதியஜனதா வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.