ர்னவா, உத்திரப்பிரதேசம்

த்திரப் பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த அகழ்வாராய்ச்சியில் மகாபாரதச் சான்றுகள் கிடைத்துள்ளன.

மகாபாரத இதிகாசத்தின் படி வர்ணாவதத்தில் துரியோதனன் பாண்டவர் தங்க ஒரு அரக்கு மாளிகையை அமைத்தான்.    அவர்களை உயிரோடு கொளுத்தி கொல்ல திட்டமிட்டான்.   ஆனால் சுரங்கப் பாதை அமைத்து பாண்டவர்கள் அங்கிருந்து தப்பினர்.    உத்திரப் பிரதேச மாநிலம் மீரட் நகரின் அருகில் உள்ள பர்னவா என்னும் இடத்தில் அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருகிறது.    இந்த பர்னவா கிராமம் மகாபாரதக் காலத்தில் வர்னாவதம் என அழைக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்ற இந்த அகழ்வாராய்ச்சியில் புராதனப் பொருட்கள் பல கிடைத்துள்ளன.    அந்தப் பொருட்கள் பலவும் இதிகாசத்தில் சொல்லப்பட்ட அந்தக் கால வாழ்க்கை முறைகளுக்கு பொருந்தும் வகையில் அமைந்துள்ளன.  இங்கு  கண்டுபிடிக்கப் பட்டுள்ள சுரங்கம் அரக்கு மாளிகையில் இருந்து வெட்டப்பட்ட சுரஙகம் என கூறப்படுகிறது.   இதே போல இந்திரப் பிரஸ்தம் மற்றும் அஸ்தினாபுரம் என சொல்லப்பட்ட இடங்களில் 1950களில் அகழ்வாராய்ச்சி நடந்தது.   அப்போது கிடைத்த பல பொருட்கள் இப்போது கிடைத்த பொருட்களுடன் ஒத்துப் போவது குறிப்பிடத் தக்கது.

இந்த அகழ்வாராய்ச்சியில் அரக்கு மாளிகை இருந்ததற்கான அடையாளம் எதுவும் கிடைக்கவில்லை.    அரக்கு மாளிகை என ஒன்று இருந்திருந்தாலும் அதன் தடயங்கள் இத்தனை வருடங்கள் இருந்திருக்க வாய்ப்பில்லை என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.   இந்த அகழ்வாராய்ச்சியில் உலோகத்தினால் ஆன பல அம்புகள், ஈட்டிகள் மற்றும் கேடயங்களும் கிடைத்துள்ளன.

மேலும் இந்த இடங்களில் பல ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளம் வந்து முழுகிய அடையாளங்கள் கிடைத்துள்ளன.   மகாபாரத இதிகாசத்தில் இங்கு வெள்ளம் வந்த போது பீமன் தனது தாயையும், சகோதரர்களையும் கையில் ஏந்தி காப்பாற்றியதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்த அகழ்வாராய்ச்சியில் மனிதன் மற்றும் விலங்குகளின் எலும்புகளும் கிடைத்துள்ளன.   அவைகளை கார்பன் 14 என்னும் ரசாயன சோதனைக்கு உட்படுத்தப் பட உள்ளது.   இதன் மூலம் அந்த எலும்புக்குரியோர் வாழ்ந்த காலம் பற்றி தெரிய வரும்.   அதன் மூலம் மகாபாரத காலகட்டம் எப்போது என்பதை ஓரளவுக்கு கணிக்க முடியும்.