டில்லி

ஆம் ஆத்மியின் டில்லி அரசைக் கவிழ்க்க பாஜக சதி செய்வதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டி உள்ளார்.

தற்போது டில்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது.  டில்லியின் முதல்வராக ஆம் ஆத்மி கசசியி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவி வகித்து வருகிறார்.

இன்று அரவிந்த் கெஜ்ரிவால்,

“டில்லியில் ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்கள் 7 பேரை பாஜக தொடர்பு கொண்டு பேசியுள்ளது. அவர்களிடம் ரூ.25 கோடி வரை தருவதாகக் கூறி பாஜக பக்கம் வருமாறு பேரம் பேசியுள்ளது.

பாஜக அவர்களிடம்,  ‘ மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கெஜ்ரிவாலை விரைவில் கைது செய்வோம். பி றகு சட்டமன்ற உறுப்பினர்களை இழுத்து ஆம் ஆத்மி அரசைக் கவிழ்க்க உள்ளோம். 21 சட்டமன்ற உறுப்பினர்களிடம் பேசி வருகிறோம். நீங்களும் வந்து விடுங்கள். உங்களுக்கு ரூ.25 கோடி தருவதோடு தேர்தலில் போட்டியிடவும் வாய்ப்பு தருகிறோம்” 

Aஎனக் கூறியுள்ளது.

ஆம் ஆத்மி கட்சியின்  21 சட்டமன்ற உறுப்பினர்களுடன் பாஜக தொடர்பில் இருப்பதாகக் கூறினாலும் இதுவரை 7 சட்டமன்ற உறுப்பினர்களை பாஜக தொடர்பு கொண்டு பேசியுள்ளது. ஆனால் 7 சட்டமன்ற உறுப்பினர்களுமே  இந்தஆஃபரை நிராகரித்து உள்ளார்கள்”

என்று தெரிவித்துள்ளார்..