அரவக்குறிச்சி:
அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் மீது காய்ச்சிய எண்ணெயை ஊற்றிவிட்டு, தலைமறைவான அவரது மனைவியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் அருகே உள்ள அரங்கப்பாளையத்தை சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (27). இவர் பீப்பிள்ஸ் பார்ட்டி ஆப் இந்தியா என்ற கட்சியின் சார்பில் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் தற்போது தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ராஜேஷ்குமார் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு கொடைக்கானலை சேர்ந்த ரேவதியை (26) காதல் திருமணம் செய்து கொண்டார். கடந்த சில நாட்களாக தம்பதிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் மாலை இவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
பிறகு ராஜேஷ்குமார் வீட்டில் தூங்க சென்றுவிட்டார். ரேவதி, சமையல் எண்ணெயை அடுப்பில் வைத்து காய்ச்சி, தூங்கிக்கொண்டிருந்த தனது கணவர் மீது ஊற்றியுள்ளார். பிறகு ரேவதி அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டார்.

வலி தாங்க முடியாமல் அலறிய ராஜேஷ்குமாரந் பக்கத்து வீட்டுக்காரர்கள் அரவக்குறிச்சி மருத்துவமனையில் சேர்த்தனர்… அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சின்னதாராபுரம் போலீசார், வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ரேவதியை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Patrikai.com official YouTube Channel