சென்னை:
தமிழகத்தில் காலியாக உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர், தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளார்.
திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி தொகுதிகளுக்கு மே 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. அதைத்தொடர்ந்து,, தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை திமுக தலைமை அறிவித்தது. அதன்படி, அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில்பாலாஜி போட்டியிடுகிறார். அதே வேளையில், அந்த தொகுதிக்கு திமுக முன்னாள் அமைச்சர், பொன்முடி, செந்தில்பாலாஜி தலைமையில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், செந்தில் பாலாஜி தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளார். அரவக்குறிச்சி தொகுதிக்கு உள்பட்ட எல்லப்பட்டி உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் கூட்டணி கட்சியினருடன் சென்று ஆதரவு திரட்டி வருகிறார்.
அப்போது அங்குள்ள மக்களிடையே பேசிய செந்தில் பாலாஜி, காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்றி அரவக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண்பேன் என உறுதி அளித்தார்.