சென்னை: அரக்கோணம்-சேலம் இடையே வாரம் 5நாள் சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே  அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது

கீழ்க்கண்ட முழுவதும் முன்பதிவு இருக்கைகளுடன் கூடிய நெடுந்தொலைவு எக்ஸ்பிரஸ் மின்சார ரெயில் 6-ந்தேதி முதல் இயக்கப்படுகிறது.

அரக்கோணம்-சேலம் (வண்டி எண்: 06087) இடையே இயக்கப்படும் நெடுந்தொலைவு மின்சார ரெயில் (எம்.இ.எம்.யூ ரெயில்) நாளை (புதன்கிழமை) முதல் சனி, ஞாயிறு தவிர்த்து வாரத்தில் 5 நாட்கள் அதிகாலை 5.15 மணிக்கு அரக்கோணத்தில் இருந்து இயக்கப்படும்.

மறுமார்க்கமாக சேலம்-அரக்கோணம் (06088) இடையே இயக்கப்படும் நெடுந்தொலைவு சிறப்பு மின்சார ரெயில் நாளை முதல் சனி, ஞாயிறு தவிர்த்து வாரத்தில் 5 நாட்கள் மதியம் 3.30 மணிக்கு சேலத்தில் இருந்து இயக்கப்படும்.

மேலும் இந்த ரெயில்களுக்கான டிக்கெட்டை இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் காலை 8 மணியில் இருந்து முன்பதிவு டிக்கெட் கவுண்ட்டர்களில் பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.