1990களின் துவக்கத்தில் மிகப் பிரலமான பாடல், , ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் வெளியான ’டேக் இட் ஈசி ஊர்வசி’ என்ற பாடல்.  இந்த பாடலின் வரிகளைில் மாற்றம் செய்யப்பட்டு  நவீன இசையில் எம் டிவி நிறுவனம் மீண்டும் வெளியிட்டிருக்கிறது.

கடந்தாண்டு இறுதியில் ஏ.ஆர்.ரஹ்மான், தனது பேஸ்புக் பக்கத்தில்,  “நான் இசை அமைத்த பாடல் ’டேக் இட் ஈஸி ஊர்வசி’ என்ற பாடலில் வரும் சரணங்களை இந்த காலகட்டததுக்கு ஏற்ற மாதிரி, மாற்ற விரும்புகிறேன். பாடல் வரிகளில் ஹிலரி, டிரம்ப் அல்லது பணத்தட்டுப்பாடு குறித்து மட்டும் குறிப்பிடாமல் எழுதி அனுப்புங்கள்” என்று கேட்டிருந்தார்.

மேலும், தமிழ் பாடலில் வந்த அதே தொனியில் சுவாரஸ்மான சமயம் நகைச்சுவையான சொற்களை பயன்படுத்தலாம் என்றும்  கூறியிருந்தார். இதையடுத்து  பல ரசிகர்கள் தங்களுடைய புதிய வரிகளை கமெண்ட் பகுதியில் எழுதித் தள்ளினர். . இதில் பிரசாத் கிருஷ்ணா, அகிந்த்ய வட்லு, ராஜேஷ் ராஜாமணி மற்றும் திலீப் பாலாஜி ஆகிய நால்வரின் வரிகளும் புதிய டேக் இட் ஈஸி பாடலுக்காக தேர்வு செய்தார் ரஹ்மான்.

 

இவர்களின் புதிய வரிகளை கொண்டும், புதிய இசை கருவிகளை கொண்டும் நிகழ்ச்சி ஒன்றில் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த புதிய பாடலை பாடினார்.

முன்னர், ஹிலரி, டிரம்ப் அல்லது பணத்தட்டுப்பாடு குறித்து வரிகள் வேண்டாம் என்று கூறியிருந்த ரஹ்மான் பின்னரும் அதனை இந்த பாடலில் சேர்த்துக்கொண்டார்.

தற்போது, இணையத்தில் இந்த பாடல் வைரலாகி வருகிறது. பல்லாயிரக்கணக்கானவர்கள் இந்த பாடலை கேட்டு வருகிறார்கள்.

அந்த வீடியோ:

https://www.facebook.com/mtvindia/videos/10154815449600102/