மதுரை:

மிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளான ஏப்ரல்-18ந்தேதி கிறிஸ்தவர்களின் புனித நாளான  பெரிய வியாழன் வருவதால்,  தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என்றும் மதுரை பேராயர் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதி உள்ளார்.

ஏற்கனவே சித்திரை திருவிழா காரணமாக தேர்தல் தேதி மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள், அரசியல் கட்சிகள் போர்க்கொடி தூக்கி உள்ள நிலையில், தற்போது கிறிஸ்தவ அமைப்பினரும் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி 7கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் 2வது கட்ட தேர்தல் நாளான ஏப்ரல் 18ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஏப்ரல் 18ந்தேதி சமயத்தில் மதுரையில் பாரம்பரியம் மிக்க  சித்திரை திருவிழா நடைபெறுகிறது. அன்றைய தினம் லட்சக்கணக்கான மக்கள் திருவிழாவுக்கு திரள்வது வழக்கம். இதன் காரணமாக தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என்று அரசியல் கட்சிகள், பொதுமக்கள், வணிகர்கள் என பல தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் முறையிடப்பட்டு உள்ளது.  இது தொடர்பாக வழக்கும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில்,  ஏப்ரல் 18-ம் தேதி பெரிய வியாழன் வருவதால், வாக்குப்பதிவு தேதியை மாற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு மதுரை மாவட்ட பேராயர் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் ஆணையத்திற்கு மதுரை உயர்மறை மாவட்ட பேரா யரும், தமிழ்நாடு ஆயர் பேரவை தலைவருமான அந்தோணி பப்புசாமி கடிதம் எழுதி இருக்கிறார். அவர் எழுதி உள்ள கடிதத்தில்,  பெரிய வியாழன் புனித நாளன்று தேர்தலை வைத்து கொள்ள உகந்தது கிடையாது, அன்றைய தினம் கிறிஸ்தவர்கள் வழிபாட்டில் கலந்து கொள்ள இயலாத சூழல் இருப்பதால், வழிபாட்டுக்கு உகந்தவாறு வாக்குப்பதிவு தேதியை மாற்ற வேண்டும் .

இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.