சென்னை: மாண்டஸ் புயல் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரிக்கு நாளை ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நாளை மறுதினம் (10ந்தேதி) ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.
சென்னையில் இருந்து 580 கி.மீ. தொலைவில் தென்மேற்கு வங்கக்கடலில் மாண்டஸ் புயல் நிலை கொண்டுள்ளது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மாண்டஸ் புயல் காரைக்காலில் இருந்து 500 கி.மீ. தொலைவில் உள்ளது. இது தற்போது, மணிக்கு 6 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.
இதன் காரணமாக நாளை (9ந்தேதி) சென்னை மற்றும் புதுச்சேரி உள்பட சில மாவட்டங்களுக்கு அதிக கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. மேலும், தமிழ்நாடு, புதுச்சேரிக்கு நாளை மறுதினம் (10-ம் தேதி) ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மிக கனமழை பெய்யும் என்பதை குறிப்பதற்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
இன்று பிற்பகல், சென்னை திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசான மலைக்கு வாய்ப்பு என்று தெரிவிக்கப்படுகிறது.