சென்னை:

மிழக அரசு அறிவித்துள்ளபடி, அத்தனை முதலீடுகளும் தமிழகத்திற்கு வந்தால், திமுக சார்பில் நாங்களே முதல்வர் எடப்பாடி  பாராட்டு விழா நடத்த தயாராக இருக்கிறோம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

தமிழகத்திற்கு முதலீடூகளை ஈர்ப்பதற்காக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 14நாள் பயணமாக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளார். அமெரிக்காவின்  நியூயார்க் நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, ” தமிழகத்தில் அமெரிக்க நிறுவனங்கள் அதிகளவில் முதலீடு செய்ய வேண்டும் என அழைப்பு விடுத்தார். அதைத் தொடர்ந்து,  2,780 கோடி ரூபாய் முதலீட்டில் தொழில் தொங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு இருப்பதாக தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், திருமண நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மு.க.ஸ்டாலின்,  தமிழகத்துக்கு லட்சக்கணக்கான கோடி ரூபாய் முதலீடுகள் வந்தால் தி.மு.க. சார்பில் முதலமைச்சருக்கு பாராட்டு விழா நடத்துவேன் என்று கூறினார்.

முன்னாள் அமைச்சர்  பெ.சாமிநாதன் மகன் திருமண விழா திருப்பூரில் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாஜக முன்னாள் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் உள்பட அனைத்துக்கட்சியைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் மணமக்களை வாழ்த்தி பேசிய ஸ்டாலின், மோடி அரசால்,  பொருளாதாரம் சீரழிந்து, தொழிற்சாலைகள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. லட்சக்கணக்கான தொழிலாளர் வேலை இழந்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.

இந்நிலையில் தமிழக முதல்வர் மற்றும் பல அமைச்சர்கள் வெளிநாடு சென்றுள்ளதை, அ.தி.மு.க. அமைச்சரவை சுற்றுலா அமைச்சரவை என்று கடுமையாக விமர்சித்தவர், எடப்பாடி அறிவித்துள்ளபடி அனைத்து முதலீடுகளும்  தமிழகத்தில் குவிந்தால், அவருக்கு திமுக சார்பில் பாராட்டு விழா நடத்த தயார்  என்றும் கூறினார்.