சென்னை:
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் தற்காலிக பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசு போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
தங்களது பி.எப். பணத்தை அரசு வேறு பணிகளுக்கு திருப்பிவிடப்பட்டதை கண்டித்தும், அப்பணத்தை தங்களுக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் தமிழகம் முழுதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதனால் 90 சதவிகித பேருந்துகள் இயங்கவில்லை. இவை, அந்தந்த ஊர் பணிமனைகளில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
பேருந்துகள் இயங்காததால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த நிலையை சமாளிப்பதற்காக தற்காலிக ஓட்டுநர்கள் பணிக்காக விண்ணப்பிக்கலாம் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சென்னை மாநகரப்பகுதியில் வசிப்பவர்கள், ஓட்டுநர் நடத்துனர் உரிமம் உள்ளவர்கள் உடனடியாக கிளை மேலாளரை அணுகலாம். அசல் சான்றுகளோட வருபவர்களுக்கு தகுதி அடிப்படையில் உடனடி பணி வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே தமழகம் முழுதும் உள்ள அரசு போக்குவரத்து கிளைகளின் மேலாளர்களை, அணுகலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.