சென்னை: தமிழ்நாட்டில் அரசு மருத்துவக்கல்லூரிகளில், பி.பார்ம், நர்சிங் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு இன்றுமுதல் இணையதளத் தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில், அரசு கலை அறிவியல், மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கான விண்ணப்பங்கள் முடிவடைந்து, மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதையடுத்து, பி.பார்ம், நர்சிங் உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த படிப்புகளில் சேர ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
அதன்படி, இன்றுமுதல்மேற்கண்ட படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் செய்ய ஆகஸ்டு 12ந்தேதி கடைசி நாள். மாணவ-மாணவி கள் தங்களது விண்ணப்பத்தை ஆன்-லைன் மூலம் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பி.பார்ம், நர்சிங் உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த படிப்புகளில் சேர www.tnmedicalselection.org, www.tnhealth.tn.gov.in ஆகிய இணையதளங் களில் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் மருத்துவ கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது என்பது குறிபிடத்தக்கது