சென்னை: தமிழ்நாட்டில் உள்ள கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாகவுள்ள 2340 உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஆன்லைன் முறையிலான விண்ணப்பத்தை செப்டம்பர் 4ம் தேதி முதல் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கடைசி நாள் செப்டம்பர் 24.

ஆங்கிலம், பொருளாதாரம், வேதியியல், வணிகவியல், வணிக மேலாண்மை, வரலாறு, புவியியல், மனித உரிமைகள் மற்றும் இந்திய கலாச்சாரம் உள்ளிட்ட மொத்தம் 73 பாடப் பிரிவுகளுக்கு உதவிப் பேராசிரியர்களை நியமனம் செய்வதற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்பதாரர்கள் தங்களின் முதுநிலை பட்டப் படிப்பை குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் நிறைவுசெய்து, மாநில அல்லது மத்திய அரசின் ஆசிரியர் தகுதித்தேர்வுகளில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும் அல்லது பிஎச்.டி. ஆய்வுப் படிப்பை நிறைவுசெய்திருக்க வேண்டும். அதேசமயம் சில குறிப்பிட்ட பிரிவினருக்கு 5% மதிப்பெண் சலுகையும் உண்டு.

விரிவான விபரங்களை அறிய www.trb.tn.nic.in என்ற வலைதளம் சென்று காணலாம்.