சென்னை: தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவ படிப்புகளான எம்.பி.பி.எஸ்.,பிடிஎஸ் படிப்புகளுக்கு நாளை (ஜூன் 6முதல்) விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது. இதை மருத்துவ துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டு உள்ளார்.

தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவ படிப்புகளுகான நீட் தேர்வு நாடு முழுவதும் மே 4ந்தேதி நடைபெற்றது. இதையடுத்து தேர்வு முடிவுகள் ஜூலை 15 ஆம் தேதி வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முடிவுகள் கிடைத்தவுடன், மருத்துவ ஆர்வலர்கள் neet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து அவற்றைப் பதிவிறக்கம் செய்ய முடியும்.
பொதுவாக நீட் தேர்வு முடிவுகள் வெளியான பிறகே தமிழ்நாட்டில் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்படும். ஆனால், இந்த ஆண்டு முன்கூட்டியே விண்ணப்பிக்க அரசு அறிவுறுத்தி உள்ளது. அதனப்டி, எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.
சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு ஆஸ்பத்திரி கூட்டரங்கில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் 2025-26-ம் கல்வியாண்டுக்கான அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீடு தொடர்பான ஆலோசனை கூட்டம், நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நடப்பு கல்வியாண்டுக்கான இடப்பங்கீடு இறுதி செய்யப்பட்டு உள்ளது. கலந்தாய்வு மற்றும் மாணவர் சேர்க்கை சீராக நடைபெற வலியுறுத்தப்பட்டு உள்ளது. தனியார் கல்லூரிகளில் கல்வி கட்டணம் தவிர விடுதி கட்டணம் போன்ற பிற கட்டணங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
கடந்த ஆண்டுகளில் நீட் தேர்வு முடிவு வெளியான பின்னர் தான் இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் பெறப்பட்டது. ஆனால், நடப்பாண்டில், நாளை (6-ந் தேதி) முதல் இளங்கலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்படும். நீட் தேர்வு முடிவுகள் வெளியான பின்னர் விண்ணப்பம் சமர்ப்பிக்க விரும்பும் மாணவர்களுக்காக விண்ணப்பத்திற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படும்.
இவ்வாறு கூறினார்.
NEET தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள் மட்டுமே தமிழ்நாடு MBBS விண்ணப்பப் படிவத்தை 2025 பூர்த்தி செய்ய தகுதியுடையவர்கள். விண்ணப்பதாரர்கள் தங்களின் தனிப்பட்ட, கல்வி மற்றும் NEET 2025 விவரங்களை உள்ளிட்டு தேவையான ஆவணங்களை தமிழ்நாடு MBBS விண்ணப்பப் படிவத்தில் பதிவேற்ற வேண்டும். மாணவர்கள் அரசாங்கத்திற்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ. 500 (SC, SCA மற்றும் ST தவிர) செலுத்த வேண்டும்.
TN NEET 2025 விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிக்கும் போது மேலாண்மை ஒதுக்கீட்டிற்கான ஒதுக்கீடு மற்றும் ரூ.1000 செலுத்த வேண்டும். பதிவுசெய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான தமிழ்நாடு NEET தகுதிப் பட்டியலை ஆணையம் வெளியிடுகிறது. தகுதிப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு NEET கவுன்சிலிங்கிற்குத் தகுதியுடையவர்கள்.
தமிழ்நாட்டின் சிறந்த MBBS கல்லூரிகளில் சேர, விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை நிரப்பி ஆன்லைன் கவுன்சிலிங்கிற்குப் பதிவு செய்ய வேண்டும்.