அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

Must read

அண்ணா பல்கலைக்கழகம் அறிவிக்கப்பட்டபடி, பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடர்பான அறிவிப்பு நாளிழ்களில் நேற்று வெளியிடப்பட்டது.
பொறியியல் படிப்புக்கு இன்று (15.04.2016) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அரசு இ-சேவை மையங்களில் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் வசதி செய்யப்பட்டிருப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
TNEA-Online-Registration-
பொறியியல் படிப்புக்கு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பிளஸ்-2 தேர்வு முடிவு வெளிவந்து 7 நாட்கள் வரை ஆன்லைன் விண்ணப்பத்துக்கு பதிவுசெய்யலாம். விண்ணப்பக் கட்டணத்தையும் ஆன்லைனிலேயே அல்லது ஆன்லைன் விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களை சேர்த்து அனுப்பும்போது, கட்டணத்துக்கான DD இணைத்தும் செலுத்திக்கொள்ளலாம்.
பிரிண்ட் அவுட் எடுக்கப்பட்ட ஆன்லைன் படிவம் மற்றும் சான்றிதழ்கள் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளிவந்த 10 நாட்களுக்குள் தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சம்பிர்கலம். விண்ணப்பக் கட்டணத்துக்கான டிமாண்ட் டிராப்ட் “The Secretary, Tamilnadu Engineering Admissions, Anna University” என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்கதாக எடுக்கப்பட வேண்டும்.
சிறப்பு இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கும் மாணவர்கள் மட்டும் பிரின்ட் அவுட் எடுத்த ஆன்லைன் விண்ணப்பங்களை நேரில் சமர்ப்பிக்க வேண்டும். தபால் மூலமாகவோ ஏற்றுக்கொள்ளப்படாது.
மேலும் தகவல் அறிய https://www.annauniv.edu/ என்ற இணையதளத்திலும் விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.

More articles

1 COMMENT

  1. 15-04-2016 மாலை 5 மணி வரை சென்னை அண்ணா பல்கலைக் கழக இணையதளத்தில் எவ்வித அறிவிப்பும் இல்லை .கீழே உள்ள அறிவிப்பு மட்டுமே இணையதளத்தில் உள்ளது…
    The Online Registration of application for TNEA2016 will commence on 15.04.2016.

Latest article