வ்வொரு ஆண்டும் உலகில் உள்ள ஆப்பிள் மற்றும் iOS, iPAD இயங்குதள நிரலாளர்களுக்காக நடத்தப்படும்  ஆப்பிளின் WWDC 2020 நிகழ்வு இந்த ஆண்டு சூன் மாதம் 22ம் தேதி நடைபெற்றது.

இந்த நிகழ்வில் ஆப்பிள்  நிறுவனத்தின் புதிய தயாரிப்பு மற்றும் அறிவிப்புகள் பற்றி அறிவிக்கப்பட்டி ருந்தது. அதில், சில பல புதிய திட்டங்கள் இருந்தாலும் ஆப்பிள் நிறுவனம் ஒரு புதிய திட்டத்தினை அறிமுகப்படுத்தியதை சிலர் மட்டும் கண்டறிந்தனர். ஆனால் அந்த திட்டமோ கூகிள் , பேஸ்புக் மற்றும் இதர விளம்பர நிறுவனங்களுக்கு பேரதிர்ச்சி.

விரைவில் வரஉள்ள iOS 14 இயங்குதளத்தில் தனியுரிமை கொள்கைகளின் அடிப்படையில் பயனாளர்கள் தேடிய, தேடும் விளம்பர விவரங்களை மற்ற நிறுவனங்களுக்கு அனுப்பப்படமாட்டது எனும் கொள்கை பெரிய நிறுவனங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஏனெனில் நீங்கள் கூகிளில் தேடும் பொருளின் விளம்பரம் உங்கள் முகநூல் பக்கத்தில் காட்டப்படும். அப்போது நீங்கள் தேடிய விளம்பர விபரம் குறித்த தகவல் கூகிள் நிறுவனத்தின் விளம்பர சர்வர்களுக்கு செல்லும், அங்கிருந்து நீங்கள் தேடிய விளம்பரம் சார்ந்த விளம்பரங்கள் கூகிள் மற்றும் பேஸ்புக் போன்ற தளங்களில் அது சார்ந்த விளம்பரம் காட்டப்படும்  செயலியில் காட்டப்படும் விளம்பரம் மூலம் ஒரு நபருக்கு விளம்பரத்தை ஒரு பயனாளர் சொடுக்கினால் அங்கிருந்து சம்பந்தப்பட்ட  தளத்திற்கு நாம் சென்று அங்கே எவ்வளவு நேரம் இருந்தோம், எந்தப்பக்கத்தில் என்ன பார்த்துக்கொண்டிருந்தோம் உட்பட பல விபரஙகள் சம்பந்தப்பட்ட விளம்பர ஏஜென்சி நிறுவனத்திற்கு அனுப்பப்படும்.

இதன் மூலம் மீண்டும் நீங்கள் அந்த செயலிக்குள் வந்தால் நீங்கள் கடைசியாக தேடிய பொருளின் விளம்பரம் மேம்படுத்தப்பட்டு காட்டப்படும். மேம்படுத்தப்பட்ட விளம்பரங்கள் மூலம் விற்பனை நடந்தால் அதுவும் பதிவாகி விளம்பர ஏஜென்சி நிறுவனத்திற்கு சென்றுவிடும்.

இப்படி நடப்பதால் பல நிறுவனங்கள் கூகிள் ஆட்வேர்ட்ஸ்,  பேஸ்புக் ஆட்ஸ் போன்ற பல நிறுவனங்கள் வழியாக விளம்பரங்களை கொடுக்கின்றன. இதனால் அவர்களுக்கும், விளம்பர ஏஜென்சி நிறுவனங்களாக செயல்படும்  கூகிள் ஆட்வேர்ட்ஸ்,  பேஸ்புக் ஆட்ஸ் போன்ற நிறுவனங்களுக்கு நல்ல வருமானம்.

ஆனால் ஆப்பிள் iOS 14 அறிமுகப்படுத்தும் புதிய தனியுரிமை கொள்கைப்படி பயனாளர்கள் தேடி விளம்பரம், அவர் எவ்வளவு நேரம் தளத்தில் இருந்தார், என்னென்னப்பொருட்களை பார்த்தார் என்ற விபரம் யாருக்கும் தெரியப்படுத்தப்பட மாட்டாது. இதனால் பயனாளர்களுக்குத் தேவையான விளம்பரத்தை காட்டமுடியாது. அவர்கள் என்ன தேட விரும்புகிறார்கள், என்ன வாங்க விரும்புகிறார்கள் என்ற விபரமும் விளம்பர ஏஜென்சி நிறுவனங்களுக்கு தெரியப்படுத்தாது. இதனால் கூகிள், பேஸ்புக் நிறுவனங்களுக்கு விளம்பர வருமானம் குறையும். ஏற்கனவே விளம்பர தடுப்பு நிரலிகளை செயல்படுத்தக்கூடாது, இது நியாயமற்றது என்று  பேஸ்புக் பெரிய யுத்தமே நடத்தி வருகிறது.


இங்கே ஒரு வசதி உள்ளது உங்கள் ஐபோன் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கும். அதில்  “Allow Tracking”  என்பதை தேர்வு செய்தால், உங்கள் விளம்பரம் குறித்த தகவல்கள் எல்லாமே விளம்பர ஏஜென்சி நிறுவனங்களுக்குச் செல்லும். இல்லையேல்  “Ask App Not To Track” என்பதை தேர்வு செய்தால் விளம்பரம் குறித்த செய்திகள் விளம்பர ஏஜென்சிகளுக்கு தெரியப்படுத்தாது.  எனவே இந்த வசதியை ஆப்பிள் நிறுவனம் நம் தலையில் கட்டிவிட்டது ,

நிறுவனங்கள் வளர வேண்டும் என்று நீங்கள் விரும்பினால்   “Allow Tracking”  என்பதை தேர்வு செய்யவேண்டும். இதில் பாதகம் என்னவென்றால்  செயலிகளில் விளம்பரம் காட்டப்படுவது தோராயமாகத்தான் காட்டப்படும். அதனால் விளம்பர வருவாய் குறைய வாய்ப்பிருக்கிறது. விளம்பர வருவாயை பிரதானமாக கொண்டு இயங்கும் நிறுவனங்களுக்கும், நிரலாளர்களுக்கும் இது பேரிடிதான். விளம்பர வருவாய் இல்லாவிடில் மேற்கொண்டு செயல்படுத்தமுடியாமல் போகலாம்.

அதேசமயம் தனியுமைக்கொள்கைகள் நிச்சயம் மதிக்கப்படவேண்டிய ஒன்று என்பதையும் மனதில் வையுங்கள் ஏனவே நிரலாளர்களும் நிறுவனங்களுக்கும் விளம்பரங்களுக்குப் பதிலாக மாதாந்திர கட்டணங்களைப் பற்றி இப்போதே யோசித்து முடிவெடுக்கலாம்.

-செல்வமுரளி