ஒவ்வொரு முறை பிரபல மாடல் ஸ்மார்ட்போன்கள் சந்தையில் வெளிவரும்போதும் அதை பலரும் பரிசோதித்து தங்கள் விமர்சனங்களை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிடுவது வழக்கம். இதுபோன்ற வீடியோக்களுக்கு ஸ்மார்ட்போன் ரசிகர்களிடத்தில் மிகுந்த வரவேற்பு உண்டு.
ஐஃபோன் 7 புதிதாக வெளிவந்துள்ள நிலையில் அது மேலே பறக்கும் ஹெலிகாப்டரில் இருந்து கீழே விழுந்தால் தாங்குமா என்ற பரிசோதனையை ஒருவர் செய்கிறார்.
ஆச்சரியபடும்விதமாக அது வேலை செய்கிறது. கீழே உள்ள காணொளியைப் பாருங்கள்:
[KGVID]https://patrikai.com/wp-content/uploads/2016/09/IPHONE-7-DROPPED-FROM-A-HELICOPTER.mp4[/KGVID]
ஐஃபோன் 7 vs சாம்சங் கேலக்ஸி நோட் 7 இரண்டில் தண்ணீரில் எது தாக்குப்பிடிக்கும்?
மற்றொரு பரிசோதனை ஐஃபோன் 7 vs சாம்சங் கேலக்ஸி நோட் 7 இரண்டில் தண்ணீரில் எது தாக்குப்பிடிக்கும் என்று கண்டறிய நடத்தப்படுகிறது. இரண்டு மொபைல்களும் தன்ணீருக்குள் 5 அடி, 10 அடி, 15 அடி, மற்றும் 20 அடிகளில் ஒவ்வொரு முறையும் 5 நிமிடங்கள் வைக்கப்பட்டு பரிசோதிக்கப்படுகிறது. அவ்வளவு ஆழத்துக்கு சென்ற பின்னும் இரு மொபைல்களும் அற்புதமாக வேலை செய்கின்றன.
<https://www.youtube.com/watch?time_continue=761&v=K05cTPeFfyM>
அதன் பின்னர் 30 அடி ஆழத்தில் 5 நிமிடங்கள் வைக்கப்பட்டு பரிசோதிக்கும் போது சாம்சங் கேலக்ஸி நோட் 7 ரீபூட் ஆகிறது. ஆனாலும் வேலை செய்கிறது. ஐஃபோன் 7 எந்த தடையுமின்றி அற்புதமாக இயங்குகிறது.
அடுத்ததாக 35 அடி ஆழத்தில் 5 நிமிடங்கள் வைக்கப்பட்டு பரிசோதிக்கும் போது சாம்சங் கேலக்ஸி நோட் 7 சுத்தமாக வேலை செய்யவில்லை. ஆனால் ஐஃபோன் 7 அதற்குப்பின்னும் மிக நன்றாக வேலை செய்கிறது.
Courtesy: www.9to5mac.com