திருப்பூர்: அரசு பள்ளி மாணவர்களின் உடல் மற்றும் விளையாட்டுத் திறனை அறிய பள்ளிக்கல்வித்துறை சார்பில் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்து உள்ளார்.

உலகத் திறனாய்வு உடன் திறன் தேர்வு போட்டிகள் பள்ளி கல்வித்துறை சார்பாக இன்று தொடங்கியது.  திருப்பூரில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற போட்டியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். அப்போது, ப்போது, பள்ளி மாணவர்களின் உடல் மற்றும் விளையாட்டுத் திறனை அறிய பள்ளிக்கல்வித் துறை சார்பில் செயலி அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்தவர்,  அந்த செயலி மூலம் திறன் கண்காணிக்கப் பட்டு ,மாணவர்களை தேர்வு செய்து பயிற்சி அளிக்க வழிவகை செய்யப்படும் என்றார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது,   6 ,7 மற்றும் 8ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் படிப்பில் அல்லாமல் விளையாட்டு போன்ற துறைகளிலும் தங்கள் திறமைகளை கொண்டு வரவே இது போன்ற போட்டிகள் நடத்தப்படுகிறது என்று கூறினார்.