ஆந்திர பெண்கள் வளைகுடா நாடுகளில் விற்பனைக்கு! : அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

Must read

ஹைதராபாத்:
ளைகுடா நாடுகளில் ஆந்திரப் பெண்கள், விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், இதைத் தடுத்து அவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆந்திர மாநில என்ஆர்ஐக்கள் நலத் துறை அமைச்சர் பல்லே ரகுநாத ரெட்டி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்குக் கடிதம் எழுதி உள்ளார்.
அந்த கடிதத்தில் ரகுநாதரெட்டி கூறியிருப்பதாவது:
“இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து பெண்கள் வீட்டு வேலைக்காக வளைகுடா நாடுகளுக்குச் செல்கிறார்கள். அவ்வாறு வீட்டு வேலைக்காக ஆந்திராவில் இருந்து சென்ற பெண்கள் பலர் பொய்யான வழக்குகளில் சிக்க வைக்கப்பட்டு, சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.. மேலும், அவர்கள் செக்ஸ் அடிமைகளாக விற்பனை செய்யப்பட்டு, கடும் சித்ரவதைகளை அனுபவிக்கிறார்கள்.
b
அந்தப் பெண்கள் மிகுந்த வேதனைக்குள்ளாகியுள்ளனர். அவர்களை மீட்டு உடனடியாக நம் நாட்டுக்குக் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக இந்திய தூதரக அதிகாரிகளுக்கு மத்திய அரசு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட வளைகுடா நாடுகளின் அரசுகளுடன் பேசி இந்த விவகாரத்தை விரைவில் சுமூகமாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உணவு, உடை உள்ளிட்டவை உடனடியாக வழங்கப்பட வேண்டும்.
ஆந்திரா மட்டுமல்லாமல் தெலுங்கானாவைச் சேர்ந்த பெண்களும் கூட பெருமளவில் இதுபோல ஏமாற்றப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை ஏதோ சில்லறை விற்பனைக் கடைகளில் பொருட்களை விற்பது போல விற்பனை செய்கிறார்கள்’ ” என்று தனது கடிதத்தில்  ரகுநாத ரெட்டி குறிப்பிட்டுள்ளார்.
சவுதி அரேபியாவில் ஒரு பெண்ணிற்கு குறைந்தது ரூ. 4 லட்சமும். பஹ்ஹைனில் ரூ. 1 லட்சம் முதல் 2 லட்சம் விலை நிர்ணயிக்கபடுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த பெண்களை விரவாதிகளுக்கும் விற்பனை செய்வதாக அதிர்ச்சித் தகவல்கள் வருகின்றன.

More articles

Latest article