unnamed-6

இந்திய ஓவியர், A.P. ஸ்ரீதர்,முதல் 3D ‘தந்திரக் கலை’ அருங்காட்சியகத்தை சென்னை VGP யில் துவக்கினார்.தனது எல்லைகளை விரிவாக்கம் செய்துள்ள A.P. ஸ்ரீதர் தற்போது அமெரிக்காவில் முதல் தந்திரக் கலை அருங்காட்சியகத்தை Stoneridge Shopping Center Pleasanton, California வில் வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியுள்ளார், இந்தமாதம் அக்டோபர், 2016 தந்திரக் கலை அருங்காட்சியகம் பொதுமக்களுக்கு திறந்து வைத்தார், மேலும் கணிசமான மக்கள் அதனை கண்டு ரசித்துள்ளனர். மொத்தம் 18 புதிய கவனமாக தேர்வு செய்த 3D ஓவியங்களை கொண்டு அமைந்துள்ளது இந்த அருங்காட்சியகம் . வழக்கமான ஆர்ட் கேலரி போன்று இல்லாமல், இங்குள்ள ஓவியங்களுடன் பார்வையாளர் ஒன்றிணைத்து,விளையாடி , நடித்து மகிழும் விதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது .

உதாரணமாக, சிம்பான்சியுடன் selfie எடுத்துக்கொள்ளலாம் , Oscar அவார்டை Oscar ரிடம் இருந்தே பெறலாம், யானையுடன் கயிற்றில் நடை பழகலாம் மேலும் மிக பெரிய அளவிலான தரை ஓவியமும் முதல் முறையாக இதில் இடம் பெற்றுள்ளது. இந்த optical illusion கிளிக் ஆர்ட் அருங்காட்சியத்தின் மையமாக உள்ளது. இப்போது அனைவரது கையிலும் ஸ்மார்ட்போன் உள்ளது மேலும் அதன் மூலம் துல்லியமாக டிஜிட்டல் கேமராவிற்கு இணையாக படங்கள் எடுக்க முடியும் என்பதால், அருங்காட்சியகத்தை அனைவரும் குடும்பத்துடன் மற்றும் நண்பர்களுடன் ஒரு வேடிக்கை நிறைந்த தரமான நேரமாய், புதிய அனுபமாய் அமையும்.

அருங்காட்சியகம் பற்றி, ஸ்ரீதர் கூறுகையில் : “நான் அமெரிக்காவில் கிளிக்ஆர்ட் அருங்காட்சியகம் துவங்கியது மகிழ்ச்சியளிக்கிறது. கலை ஆர்வலர்கள்சிலர்க்கு நவீன ஓவியங்கள் பிடிக்கும், மேலும் சிலர்க்கு பாரம்பரிய ஓவியங்கள்பிடிக்கும். “மக்கள் ஆர்ட் கேலரி வெறும் ஓவியங்கள் கண்காணிக்க வருவதுமாறி இந்த அருங்காட்சியகம் ஒரு புதிய பரிமாணத்தை சேர்க்கிறது”. A.P. ஸ்ரீதர்மேலும் கூறுகையில் கலைப்படைப்புகளை கலைஞர்களை காட்டிலும் அமெரிக்கர்கள் அதிகமாய் வரவேற்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கர்களின் வரவேற்பினை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன் .