பிரபல தெலுங்கு நடிகையான அனுஷ்கா ஷெட்டி நடித்து வெளிவிந்துள்ள பாகமதி திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தின் வர்த்தகம் 50 கோடி ரூபாய் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பத்மாவத் திரைப்படத்துக்கு இணையாக மக்களிடையே பெரும் எதிர்பார்பையும் வரவேற்பையும் பெற்று பாஹமதி படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டாகி உள்ளது.
லேடி சூப்பர் ஸ்டார் என்று தெலுங்கு ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகை அனுஷ்கா, பாகுபலி படத்தின் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்றார். இவர் ஏற்கனவே சூர்யாவுடன் சிங்கம் உள்பட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், தற்போது அவர் நடித்துள்ள பாஹமதி படம், தமிழ் தெலுங்கில் வெளியாகி வசூலை வாரி வருகிறது. இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இதன் காரணமாக இவரது படம் வர்த்தக சந்தையிலும் வெற்றியை ஈட்டி வருகிறது.
அனுஷ்காவின் படங்களள் பல ஆண்டுகளாக பாக்ஸ் ஆபிஸில் ஹிட் ஆகி உள்ளது. ஏற்கனவே கடந்த 2015ம் ஆண்டு அவர் நடிப்பில் வெளியான ருத்ரமாதேவி படம் முதல் நாளிலேயே உலகம் முழுவதும் 12 கோடி வசூலாகி சாதனை படைத்தது. இந்நிலையில் தற்போது வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் பாஹமதி திரைப்படம் வசூலை வாரி குவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் வர்த்தகம் 50 கோடியை தாண்டும் என்று எதிர்பார்க்கபடுகிறது. இதன் காரணமாக பாக்ஸ் ஆபிசில், 50 கோடி ரூபாய்க்குள் நுழைந்த முதல் தென்னிந்திய பெண் திரைப்படமாக பாஹமதி உள்ளது. வெளிநாடுகளிலும் நல்ல வசூலை பெற்றுவருவதாகவும் கூறப்படுகிறது.
பாஹமதி திரைப்படம் மிகக் குறைவான பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு, அதிக லாபத்தை ஈட்டி வருவதாக கூறப்படுகிறது.
பாஹமதி வெற்றி குறித்து, நடிகை அனுஷ்கா தனது முகநூல் பக்கத்தில் நன்றி கூறி பதிவிட்டுள்ளார். அதில்
பாஹமதி திரைப்பட வெற்றிக்கு காரணமான உங்கள் ஒவ்வொருவரும் நன்றி செலுத்துகிறேன் என்று கூறி உள்ளார்.
மேலும், இந்த படத்தின் வெற்றிக்கு காரணமான படத்தின் டைரக்டர் அசோக் காரு மற்றும் யுவி டீம் அனைவ ருக்கும் தனிப்பட்ட நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும், இந்த படத்துக்காக 4 ஆண்டுகள் காத்திருந்து தயாரித்ததும், இந்த படம் தனது வாழ்க்கையின் மறக்க முடியாதது என்றும், படத்தை தயாரித்த அவர்களின் கடின முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்றும் கூறி உள்ளார். மேலும், இந்த படத்தில் நடித்துள்ள ஒவ்வொரு கேரக்டரும் தனது பணியை சிறப்பாக செய்துள்ளனர் என்றும் கூறி உள்ளார்.
மேலும், படத்தை வெற்றியடைய செய்த தனது ரசிகர்களுக்கும், ஆதரவு தந்த அனைவருக்கும் நிபந்தனையற்ற அன்பும் ஆதரவும் அளித்த அனைவருக்கும் நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.