செக்கச்சிவந்த வானம்’ படத்தைத் தொடர்ந்து, ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இயக்குவதில் ஆர்வமாகியுள்ளார் மணிரத்னம். இந்த படத்திற்காக கார்த்தி, விக்ரம், அமிதாப் பச்சன், ’ஜெயம்’ ரவி, ஐஸ்வர்யா ராய், மோகன் பாபு, கீர்த்தி சுரேஷ் , நயன்தாரா ஆகியோரை படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

சமீபத்தில் கேன்ஸ் திரைப்பட விழாவில் தனது மகள் ஆராத்யாவுடன் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராய் தான் அதில் நடிக்க போவதாக பெருமையுடன் கூறினார்.

இந்நிலையில் பூங்குழலி கதாபாத்திரத்திற்காக நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், தற்போது படக்குழு அனுஷ்காவை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐஸ்வர்யா ராய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதால், தன்னுடைய கதாபாத்திரம் இப்படத்தில் எடுபடாமல் போய்விடும் என்று கருதி நயன்தாரா அந்த வாய்ப்பை நிராகரித்துவிட்டதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே இருமுறை மணிரத்னம் இயக்கிய ‘ராவணன்’ மற்றும் ‘கடல்’ படங்களில் நடிக்க நயன்தாராவிடம் பேச்சு வார்த்தை நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

[youtube-feed feed=1]