
ஆந்திரா சுதந்திரப் போராட்ட வீரரான நரசிம்மா ரெட்டியின் வாழ்க்கை வரலாறு படமான ‘சைரா’ மூன்று மொழிகளில் பிரமாண்டமாக உருவாகி வருகிறது . நரசிம்மா ரெட்டியாக சிரஞ்சீவி நடிக்கிறார். நயன்தாரா கதாநாயகியாக நடிக்க அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி, தமன்னா, அனுஷ்கா, ஜெகபதிபாபு, சுதீப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இருக்கும் இந்த நிலையில் கடைசி நாள் படப்பிடிப்பின்போது அனுஷ்காவுக்கு காலில் காயம் ஏற்பட்டு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது .
இந்நிலையில், அந்த வதந்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் அனுஷ்கா. “நான் வலிமையாகவும் ஆரோக்கியமாகவும் உள்ளேன். தற்போது சியாட்டில் நகரத்தில் படப்பிடிப்பில் இருக்கிறேன்” என இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார் அனுஷ்கா..
சியாட்டில் நகரத்தில் மாதவன் ஜோடியாக அனுஷ்கா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ஹேமந்த் மதுகர் இயக்கும் இந்தப் படம், தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகிறது.
[youtube-feed feed=1]