பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் ‘ஹீரோ’ படம், வருகிற கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கடந்த மார்ச் 13-ம் தேதி பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது . கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில், கல்யாணி ப்ரியதர்ஷன் மற்றும் இவானா இருவரும் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். அர்ஜுன், முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்நிலையில், இந்தப் படம் வருகிற கிறிஸ்துமஸ் விடுமுறையில் ரிலீஸாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.