சென்னை:

திக விலைக்கு ரயில் டிக்கெட்டுகள் விற்பனை செய்து வந்த   அதிக விலைக்கு விற்பனை செய்த  20 முகவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், அவர்களிடம் இருந்து  ரூ.15லட்சம் பெறுமான முன்ள்ள ரயில் டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும் ரயில்வே பாதுகாப்பு படை தெரிவித்து உள்ளது.

இணையத்தில் முறைகேடாகப் பயணச்சீட்டுகளை எடுத்து அதிக விலைக்கு விற்பதாக ஏராளமான புகார்கள் தெரிவிக்கப்படுகின்றன. குறிப்பாக பண்டிகை காலங்களில், பொதுமக்களுக்கு தேவையான டிக்கெட்டுக்கள் கிடைக்காத நிலையில், பெரும்பாலான டிக்கெட்டுக்களை முகவர்களே எடுத்து வைத்துக்கொண்டு அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

இதையடுத்து பயணிகளுக்கு முறையாகப் பயணச்சீட்டு கிடைக்கவும், போலி டிக்கெட் முகவர்கள், மற்றும் முன்கூட்டியே டிக்கெட் எடுத்து விற்பனை செய்து வரும் ஏஜன்சிகள் மீது நடவடிக்கை எடுக்க ரெயில்வே முடிவு செய்தது.

அதைத்தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்பு படையின் (ஆர்.பி.எஃப்) எதிர்ப்பு டவுட்டிங் சிறப்பு குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது. அவர்களுக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, கொரட்டூரில் உள்ள கிருஷ்ணா ஏஜென்சி மற்றும் அயனாவரத்தில் உள்ள சூர்யா ஏஜென்சி ஆகியவற்றில் அதிரடி சோதனை நடத்தியது.

இதில், முறைகேடாக டிக்கெட் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில்,  அதிக விலைக்கு விற்ற இரண்டு பயண முகவர்களும்  ஒருங்கிணைந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்டனர்.

விசாரணையில்,
ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய 50 க்கும் மேற்பட்ட தனிப்பட்ட பயனர் ஐடிகள் பயன்படுத்தப்பட்டதாக தேடலின் போது கண்டறியப்பட்டது. இந்த டிக்கெட்டுகள் பின்னர் பொதுமக்களுக்கு அதிக விகிதத்தில் விற்கப்பட்டன. ஏஜென்சிகளை நடத்தி வந்த பிரேமானந்த் மற்றும் கிருஷ்ணானந்த் ஆகியோரை இந்த குழு கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும், ரயில்வே பாதுகாப்பு படையின் (ஆர்.பி.எஃப்) டவுட்டிங் சிறப்பு குழு நடத்திய வேட்டையில்,  300 க்கும் மேற்பட்ட ரயில்வே இ-டிக்கெட்டுகளை   ரூ. 3.5 லட்சம் மதிப்பில் கைப்பற்றியது. மேலும்,, டிக்கெட் முன்பதிவு செய்ய பயன்படுத்தப்படும் சாதனங்கள் மற்றும் உபகரணங்களையும் இந்த அணி கைப்பற்றியது.

ரயில்வே பாதுகாப்பு படையினர் அதிரடி சோதனையில்  கடந்த மூன்று மாதங்களில், சென்னை பிரிவில் அமைக்கப்பட்ட அணியினர் மட்டும் ரூ. 15 லட்சத்துக்கும் அதிகமான மதிப்புள்ள டிக்கெட்டுகளை பறிமுதல் செய்துள்ளதாகவும், 20 பயண முகவர்களை கைது செய்து இருப்பதாகவும், மூத்த ஆர்பிஎப் பாதுகாப்பு ஆணையர் சந்தோஷ் சந்திரன் தெரிவித்துள்ளார்.